Pages

Saturday 4 November 2017

Thiruvannamalai temple history in Tamil

Thiruvannamalai temple || thiruvannamalai || Thiruvannamalai girivalam ||

திருவண்ணாமலை தல வரலாறு !!!



கா‌ர்‌த்‌திகை மாத‌ம் 15ஆ‌ம் தே‌தி (டிச‌ம்ப‌ர் 1) செ‌வ்வா‌ய்‌க் ‌கிழமை ‌திருவ‌ண்ணாமலை ‌தீப‌‌த் ‌திரு‌விழா நடைபெறு‌கிறது. அ‌ன்றைய ‌தின‌ம் ‌திருவ‌ண்ணாமலை‌யி‌ல் கா‌ர்‌த்‌திகை ‌தீப‌ம் ஏ‌ற்ற‌ப்படு‌ம். இதனை‌க் காண ல‌ட்ச‌க்கண‌க்கான ப‌க்த‌ர்க‌ள் ‌திருவ‌ண்ணாமல‌ை‌யி‌ல் கூடுவா‌ர்க‌ள்.இ‌ந்த சமய‌த்‌தி‌ல் ‌திருவ‌ண்ணாமலை‌ தல‌த்‌தி‌ன் அருமைகளை நா‌ம் அ‌றி‌ந்து கொ‌ள்வது அவ‌சியமா‌கிறது.ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று 2 முதல் 3 லட்சம் பக்தர்கள் 14 கி.மீ. நீளமுடைய மலைப்பாதையைச் சுற்றி கிரிவலம் வருகின்றனர். கார்த்திகை தீபத்தன்று 10 முதல் 15 லட்சம் பக்தர்கள் திரண்டு இந்த புனித மலையின் உச்சியில் ஏற்றப்படும் தீபத்தைக் கண்டு தரிசித்து வணங்கிச் செல்கின்றனர்.இந்த புனித திருத்தலத்தில்தான் இந்துக்களின் மிக முக்கியமான மகா சிவராத்திரி பண்டிகை உருவானது.இப்படி புகழ்பெற்ற புனிதத் தலமாக விளங்குவதுதான் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் என்றும், திரு அண்ணாமலையார் என்றும் அழைக்கப்படும் 2,665 அடி உயரமுற்ற சிவபெருமானின் உருவமாக தரிசிக்கப்படும் திருவண்ணாமலை ஆகும்.நினைத்த மாத்திரத்திலேயே முக்தி அளிக்கக்கூடிய திருத்தலம் இது. சிவபெருமானின் பஞ்சபூத திருத்தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்று. இது சிவனின் அக்னித் தலமாகும். காஞ்சி, திருவாரூர் (புவித் தலம்), சிதம்பரம் (ஆகாயம்), ஸ்ரீ காளஹஸ்தி (வாயுத் தலம்), திருவாணைக்கால் (நீர்த் தலம்) ஆகும்.மகா சிவராத்திரி!படைப்புக் கடவுளான பிரம்மனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவிற்கும் தனது பேருண்மையை உணர்த்த சிவபெருமான் அக்னி வடிவமாய் எழுந்தருளிய திருத்தலம் என்று சிவபுராணத்தங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும், விஷ்ணுவும் வாதிட்டனர். அந்த வாத்திற்கு பதில் தேடி சிவபெருமானிடம் வந்தனர். அவர்களில் யார் பெரியவர் என்பதை விளக்கிட சிவபெருமான் ஒரு சோதனையை நடத்தினார். தனது தலையையும், பாதத்தையும் காண்பவரே உங்களுள் பெரியவர் என்று கூறி வானத்திற்கும், பூமிக்குமாய் ஜீவஜோதியாய் எழுந்தருளினார்.
அந்த சோதனையை ஏற்ற வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் காலடியைக் காண பூமியைத் தோண்டிச் சென்றார். அன்னத்தின் வடிவத்தைப் பெற்ற பிரம்மன் சிவபெருமானின் உச்சியைக் காண வானத்திற்கு எழும்பினார். இருவரும் கடுமையாக முயற்சித்தும் சிவனின் தலையையோ, அடியையோ காண முடியவில்லை.தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விஷ்ணு திரும்பினார். உயர உயரப் பறந்து முயன்ற பிரம்மன் களைப்படைந்திருந்த நிலையில், வானத்தில் இருந்து பூமியை நோக்கி விழுந்துக் கொண்டிருந்த தாழம்பூவைக் கண்டார். எங்கிருந்து வருகிறாய் என்று பிரம்மன் கேட்க, நான் சிவனின் தலைமுடியில் இருந்து விழுந்து கொண்டிருக்கிறேன். யுகம், யுகமாய் பயணித்தும் பூமியை அடையவில்லை என்று கூறியது. தான் சிவனின் தலை முடியைக் கண்டதாக அவரிடம் சாட்சி கூறுமாறு பிரம்மன் கேட்க, தாழம்பூ அதற்கு ஒப்புக்கொண்டு அவ்வாறே சிவபெருமானிடமும் உரைத்தது.பிரம்மனுக்காக தாழம்பூ பொய் கூறியதைக் கேட்ட சிவபெருமான் கோபமுற்று ஜோதி வடிவாய் இருந்தவர், அக்னிப் பிழம்பாக மாறினார். அந்த அக்னியால் ஏற்பட்ட வெப்பம் பூமியை மட்டுமின்றி, சொர்க்கத்தையும் வாட்டியது.சிவனின் உடம்பில் குடிகொண்டிருந்த இந்திரன், எமன், அக்னி, குபேரன் உள்ளிட்ட அட்டத்திக்கு பாலகர்கள் எட்டு பேரும் வெப்பம் தாங்காமல் வெளியில் வந்து விழுந்தனர்.சிவபெருமானை அமைதி பெறும்படி வேண்டினர். சக்தியும், தேவர்களும் அவ்வாறே வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், ஓர் மலையாய் அடங்கி சிறிய ஜோதியாய் அதன் உச்சியில் தென்பட, அனைவரும் வணங்கினர். அந்த நாளே மகா சிவராத்திரியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

2 comments: